Tuesday, January 29, 2008

கனவுகள் ஆயிரம் - 6

பனித்துளி தூவும் பனிமழையா நீ ?
தேனீக்கள் சுழலும் தென்கூடா நீ ?
வண்டுகள் சுற்றும் பூன்சொலையா நீ ?
விரல்கள் மீட்டும் வீணையா நீ ?
உதடுகள் உச்சரிக்கும் பாடலா நீ ?
கற்பனையில் மிதக்கும் கவியா நீ ?
காற்றோடு பறக்கும் பறவையா நீ ?
வண்ணமாய் மின்னும் வானவில்லா நீ ?
வசீகரமாய் வரைந்த ஓவியமா நீ ?
என் கனவுகளில் வாழும் களஞ்சியமா நீ ?
உலகெங்கும் உன்னைக்கான ஒடோடித்தேடினேன்...
என்றுன் விழிகளைக்காண வழி திறக்குமோ ?

6 comments:

Anonymous said...

கோர்வாவன வார்த்தைகள் நல்ல கற்பனை
மனம் குளிர்ததது

ரசிகன் said...

தென்கூடா - தேன்கூடா?
பூன்சொலையா - பூஞ்சோலையா?
உன்னைக் கான -உன்னைக் காண

அவ்வ்வ்வ்வ்... என்னிய விட நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவிங்க போலயிருக்கே:P

ரசிகன் said...

//உதடுகள் உச்சரிக்கும் பாடலா நீ ?
கற்பனையில் மிதக்கும் கவியா நீ ?//

அழகான வர்ணனைகள்:)1

ரசிகன் said...

//உலகெங்கும் உன்னைக்கான ஒடோடித்தேடினேன்...
என்றுன் விழிகளைக்காண வழி திறக்குமோ //

விரைவில் விழிக்காண வழி திறக்க வாழ்த்துக்கள்:P

கவிதை நல்லாயிருக்குங்க:)

Vijay said...

இன்று தான் உங்கள் கவிதைப்பதிவுகளைப்பார்க்கிறேன். கவிதைகள் யாவும் அற்புதம்.

\\உலகெங்கும் உன்னைக்கான ஒடோடித்தேடினேன்...
என்றுன் விழிகளைக்காண வழி திறக்குமோ ?\\
இந்த இரு வரிகள் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. ஒரு ஏக்கம் கலந்த தேடல் தெரிகிறது.
வாழ்த்துக்கள்.

கருணாகார்த்திகேயன் said...

எல்லாமும் வெல்லமாய் இருந்தது...
காரம் கொஞ்சம் தந்தால் நன்றாக இருக்கும் ..

இந்த "word verification " வேணாமே...
கஷ்டமா இருக்கு ..

அன்புடன்
கார்த்திகேயன்