Tuesday, January 22, 2008

உறவுகள் - 1

விரல் சப்பும் வயதினில்,
விரல் கோர்த்து வளர்ந்தோம்.
தவிழ்ந்து போகும் வயதினில்,
தேர்நடையாடி வளர்ந்தோம்.
நடை பழகும் வயதினில்,
நாடோடியாகி வளர்ந்தோம்.
பட்டம் விடும் வயதினில்,
பட்டாம்பூச்சிகளாய் வளர்ந்தோம்.
சண்டை பிடிக்கும் வயதினில்,
சாய்ந்தாடி வளர்ந்தோம்.
பள்ளி பருவ வயதினில்,
பகல் கனவு கண்டு வளர்ந்தோம்.
கல்லூரி செல்லும் வயதினில்,
கைகொர்தோடி வளர்ந்தோம்.
மங்கையாகிய வயதினில்...
பிரிவெனும் துக்கம் என் மனதைக்கட்டிவிட...
மணக்கோலத்தில் உன்னைக்காண,
ஏனோ என் இதயம் துடிதுடிக்குதடி ?

3 comments:

Vijay said...

\\மணக்கோலத்தில் உன்னைக்காண,
ஏனோ என் இதயம் துடிதுடிக்குதடி ? \\
நல்லவேளை கடைசி வரியில்,
"ஒரே மணாளனை இருவரும் மணந்தோம்"னு எழுதாம இருந்தீங்களே :)
Just joking.
Kavithai is simply superb :)

Smriti said...

Thanks Vijay.

The idea behind this is the feeling of a boy while witnessing the wedding of his twin sister.

ஜியா said...

//The idea behind this is the feeling of a boy while witnessing the wedding of his twin sister.
//

Oh!!

vaarthaigal nalla irunthathu... keep rocking... :))