Friday, December 28, 2007

இதயமோ ஓர் கைப்பிடி...

பாசத்தால் கல்லும் கறையும்
நேசத்தால் முள்ளும் மலராகும்
வலிகளில் வசிக்கும் வார்த்தைகளின் சுமை
இவ்வனைத்தும் தாங்குவது இதயத்தின் கடமை
மனிதனின் இதயமோ ஒரு கைப்பிடி அளவு
ஆனால் மனது படும் பாடால் உண்டாவது கண்ணீரின் செலவு
இறைவனின் படைப்பில் இது ஓர் ஆச்சர்யம்
விடையில்லா பல வினாக்களின் கைவண்ணம்.

Friday, December 21, 2007

கனவுகள் ஆயிரம் - 4

வானிலிருந்து பூமி வரை...
இமயம் முதல் குமரி வரை...
விடியலில் இருந்து இரவு வரை...
துவக்கம் முதல் இறுதி வரை...
பிறப்பிலிருந்து இறப்பு வரை...
வாழ்க்கை எனும் பாதையைக்கடக்க,
உன் துணையின்றி வீழ்வேன்।
என்னைப்பிரிந்துவிடாதே!

கனவுகள் ஆயிரம் - 3

காலையில் உதிக்கும் கதிரவனும் நீயே!
பறந்தோடி வரும் பூவிதழ்களும் நீயே!
என்னுள் நின்று வாழும் அமிர்தமும் நீயே!
இப்படியோர் இன்ப வெள்ளம் ஏனடி தாயே?

உன் கூந்தல் என் வானத்தின் காற்றோ?
உன் உதடுகள் என் மனக்கடலின் சுழலோ?
உயிரூற்றி உறவாட வந்தாய்,
கண் பேச்சில் என் உணர்வுகளைப்பரித்தாய்,
அருவியாக நீ வரும் நாளை நோக்கி காத்திருந்தேன்...
ஏன் இந்த அன்புத்தொல்லையடி பெண்ணே?

உன் உச்சரிப்புகளே என் செவியின் இசை!
உன் நடையே என் கடலின் அலை!
வெட்கத்தால் மறைந்து நின்று என்னை பார்த்தாய்,
ஓர் நொடியினிலே என் நினைவுகளை மறக்கச் செய்தாய்,
புயலாக என் வாழ்வில் வந்தாடிய உன் நிழல்...
என்று என் கறை கடக்குமோ பெண்ணே?

கறுவிலிருந்து தாய்மடிவரை...

ஆழ்ந்து தூங்கியே ஏன் இருந்தேன் என்று யோசித்தேன்
மிருதுவான அரவணைப்போடு பல மாதம் வாழ்ந்தேன்
என் நினைவுகள் பிர்ரக்கும் முன்பு உருவாகியதென் இதயம்
என் அறியாமையில் உருவாகியதென் சுவாசம்

ஓர் கொடியின் மூலம் வந்தது என் உணவு
அதன் செயலாக்கத்தால் வந்தடைந்ததென் உணர்வு
இதயம் துடிதுடிப்பதேன் நினைவறிந்தது
அதனால் ஏற்படும் வளர்ச்சியை என் மனம் கண்டது

உணர்வுகளோடு உணர்ச்சிகளும் பெருகின
எனது பாதங்கள் உதைக்கத் தொடங்கின
கைகளோ, விரல்களோடு உருவாகி விளையாடின
ஆனால் ஒவ்வொரு அசைவிலும் ஏனோ ஓர் தடங்கல்?

யோசனைகள் என்னுள் குவிய ஆரம்பித்தன
ஏனிந்த தடையென்று கேள்விகள் கருவுற்றன
தெரிந்து கொள்ளவேண்டுமென்ற நோக்கம் ஒளிவிட்டது
அதன் விளைவுகளால் தொடங்கியது என்
கை-கால்களின் அசைவுகள்.

சிறிது-சிறிதாக வளர்ச்சி என்னுள் தெரிந்தது
எனது கண்ணிமைகள் திறபிற்காக ஏங்கியது
செவிக்குள் வெளியிலிருந்து கேட்கும் இசையின் அமுது
மனதினுள் செல்லும் பாதையை கண்டறிந்தது

இசை வெள்ளத்தில் ஆழ்ந்தேனென்று அறியாமல் தலையாடியது
அப்பொழு துணர்ந்தேன் வலியினா லின்புற்ற
தாயின் விரல்களை...
அதோடு சேர்ந்தாடியது என் அறையடிக்கூந்தல்
கண்களைத் திறக்க ஆசையூட்டியதென் மனம்

ஒரு நொடி கண் சிமிட்டிப்பார்தேன்
இருட்டாகத் தெரிந்ததென் தாயின் கருவறை
சில நிமிடங்களுக்குப்பிறகு வந்ததோர் ஆச்சர்யம்
உலகத்தை கண்டதென் விழிகள்,
தாயின் நுணிவிரலைத்தாங்கியதேன் கைகள்।

தாயோடு ஒன்றிருந்த என்னை
வெளி உலகத்தின் ஒரு நொடி பார்வை மகிழ்வூட்டியது
இந்த சிலிர்ப்பூட்டும் இன்பத்தைக்கொண்டாட நினைத்தேன்
உறங்கினேன் மறுபடியும் தாய்மடியில்...
கட்டை விரலை வாயில் வைத்து।

Thursday, December 20, 2007

கனவுகள் ஆயிரம் - 2

அபினயங்களால் வரைந்த நாட்டியம்,
ஜதிகளால் வரைந்த மெட்டு,
ஸ்வரங்களால் வரைந்த இசை,
சுவடுகளால் வரைந்த ஓலை,
கொடிகளால் வரைந்த சோலை,
இலைகளால் வரைந்த கிளைகள்,
கிளைகளால் வரைந்த மரங்கள்,
இதழ்களால் வரைந்த பூக்கள்,
பூக்களால் வரைந்த மாலை,
சொற்களால் வரைந்த வார்த்தைகள்,
வார்த்தையால் வரைந்த மொழி,
இதழ்களால் வரைந்த உச்சரிப்பு,
கரங்களால் வரைந்த கருணை,
பார்வையால் வரைந்த பாசம்,
பாசத்தால் வரைந்த சொந்தம்,
மனதால் வரைந்த உணர்வுகள்,
உணர்வுகளால் வரைந்த காதல்,
உறங்க சாய்ந்தேனவள் மடியில்...
கண்டேன் இவ்வனைத்தும் அந்தோர் நொடியில்!

கனவுகள் ஆயிரம் - 1

வண்டாடும் சோலையிலே நின்றாடும் பூங்கொடியே
பந்தாடும் காற்றினில் சாய்ந்தாடும் முளைக்கதிரே
கண்டாடும் சிலிர்ப்பினை கொண்டாடும் பொன்மலரெ
திண்டாடும் என் மனதை வென்றாடும் உன் புன்சிரிப்பே।

அவள் ஒரு தொடர்கதை...

கருவறையில் தொடங்கி,
குழந்தையாய் இன்னல்களைக் கண்டு,
சிறுமியாய் துன்பங்களைத்தாண்டி,
மங்கையாய் பாரங்களைச்சுமந்து,
மருமகளாய்ப் பொறுப்புக்களை ஏற்று,
மனைவியாய் குடும்பத்தைக்கய்யாண்டு,
தாயாய் வலிகளைத்தாங்கி,
முதுமையிலும் சோர்வடையாமல்,
நிமிர்ந்து நின்றதவள் நம்பிக்கை ...
அப்பெண்ணின் வாழ்க்கையோர் சகாப்தமே!

திருப்பாவை பாடிய பாவை

விடியும் முன் விழித்தெழுந்து,
மார்கழிப்பனியில் நீராடி,
கண்கவர் வண்ணத்தில் பட்டுடுத்தி,மஞ்சள் கலந்த குங்குமத்தோடு அலங்கரித்து,பனிவிழும் இறுவாயினில் நெய்தீபம் ஏற்றி,வண்டாடும் சோலையினில் பூப்பறித்து,உள் அமர்ந்த பக்தியுடன் மலர் மாலை கோர்த்து,
நாராயணனின் நினைப்பினிலே ஆழ்திருந்து ,
அப்பூமாலையையணிந்த அழகை பார்த்தபின் அவனுக்கணிவித்து,
பாவை நோன்பிருந்து திருப்பாவைப்பாடி,
நெடுமாலின் மனதினை அடைந்தமர்ந்தாள்.
கோதையெனும் சூடிக்கொடுத்த சுட்ரர்கொடி!