Tuesday, October 7, 2008

தெரியவில்லை !

கதிர்களோடு உதிக்கும் சூரியனின் வெளிச்சம் என் கண்களுக்குத் தெரியவில்லை,
பனியோடு மலரும் மொட்டின் வாசம் எனக்கு மணக்கவில்லை,
உறக்கம் கலைக்க முழங்கும் சங்கின் ஒலிவரிசை எனக்கு கேட்கவில்லை,
தாகம் தீர்க்க குடிக்கும் நீரின் இனிமையை நான் சுவைக்கவில்லை,
சுகமான தாலாட்டிலுள்ள சிலிர்ப்பூட்டும் ஸ்பரிஸங்களையும் நான் உணரவில்லை.
மொத்தத்தில் செயல்படாமல் வசித்ததேன் மனம்...
உன்னினைப்பினில் ஆழ்ந்தே !

Monday, October 6, 2008

கனவுகள் ஆயிரம் - 7

துள்ளித் திறிந்த காலங்கள் சில ...
துன்பங்கள் தாங்கி நின்ற நாட்கள் பல ...
நாம் சேர்ந்து கழித்த நேரத்தின் நீளம் நேற்று வரை நான் பெரிதாக உணரவில்லை.
ஆனால் உன்னை பிரிந்து வாழும் ஒவ்வொரு நொடியிலும்,
நிஜங்கள் கூட என் கண்களுக்கு நிழல்கலாகத் தெரிகின்றதே!!!

Monday, August 25, 2008

நாங்கள் சிட்டுக்குருவிகளே !!!

பல மைல் தூரம் பறந்தோம் ...
சில பல கடல்களைக் கடந்தோம் ...
ரக்கைகளை மூடும் கணம் எதிர்பார்த்தே சென்றோம் ...
நாங்கள் சிட்டுக்குருவிகளே !!!

தேவை உயிர் வாழ கைப்பிடியளவு தானியம் ,
தேவை சுழற்காற்றில் பதுங்குவதர்கொர் இடம் ,
தேவை பறந்தோடி மகிழ்வோடு வாழ பசுமையான ஓர் வனம் ,
நாங்கள் சிட்டுக்குருவிகளே !!!

Tuesday, January 29, 2008

கனவுகள் ஆயிரம் - 6

பனித்துளி தூவும் பனிமழையா நீ ?
தேனீக்கள் சுழலும் தென்கூடா நீ ?
வண்டுகள் சுற்றும் பூன்சொலையா நீ ?
விரல்கள் மீட்டும் வீணையா நீ ?
உதடுகள் உச்சரிக்கும் பாடலா நீ ?
கற்பனையில் மிதக்கும் கவியா நீ ?
காற்றோடு பறக்கும் பறவையா நீ ?
வண்ணமாய் மின்னும் வானவில்லா நீ ?
வசீகரமாய் வரைந்த ஓவியமா நீ ?
என் கனவுகளில் வாழும் களஞ்சியமா நீ ?
உலகெங்கும் உன்னைக்கான ஒடோடித்தேடினேன்...
என்றுன் விழிகளைக்காண வழி திறக்குமோ ?

கனா கண்டேனடி!

விடியற்காலையில் விழித்து
கூந்தல் நனைய புனித நீராடி
பூ மணத்துடன் நகை சேர்த்து தலைகோதி
மடி சேர்த்து பட்டுடுத்தி
கொதைபோல் கொண்டையிட்டு
பூமாலை அணிந்தலங்கரித்து
பாவை நோன்பிருந்து
மாவிலை தோரணம் கட்டி
வண்ணம் நிறை மணப்பந்தலிட்டு
மகிழ்ச்சியான பாடல் ஒலியுடன் ஊஞ்சலாடி
மலர்ந்த முகத்துடன் கைபிடித்தேழுந்து
மங்கள மேல தாளம் முழங்க
தந்தை மடி சாய்ந்தமர்ந்து
திருமாங்கல்யம் சூட
கனா கண்டேனடி!

Tuesday, January 22, 2008

உறவுகள் - 1

விரல் சப்பும் வயதினில்,
விரல் கோர்த்து வளர்ந்தோம்.
தவிழ்ந்து போகும் வயதினில்,
தேர்நடையாடி வளர்ந்தோம்.
நடை பழகும் வயதினில்,
நாடோடியாகி வளர்ந்தோம்.
பட்டம் விடும் வயதினில்,
பட்டாம்பூச்சிகளாய் வளர்ந்தோம்.
சண்டை பிடிக்கும் வயதினில்,
சாய்ந்தாடி வளர்ந்தோம்.
பள்ளி பருவ வயதினில்,
பகல் கனவு கண்டு வளர்ந்தோம்.
கல்லூரி செல்லும் வயதினில்,
கைகொர்தோடி வளர்ந்தோம்.
மங்கையாகிய வயதினில்...
பிரிவெனும் துக்கம் என் மனதைக்கட்டிவிட...
மணக்கோலத்தில் உன்னைக்காண,
ஏனோ என் இதயம் துடிதுடிக்குதடி ?

Thursday, January 17, 2008

இன்னல் துடைத்த மின்னல்

உதயம் முதல் அஸ்தமம் வரை,
தினம் தினம் வாழ்வில் எத்தனை இன்னல்கள்!
கதறினேன் ஆனால் காணவில்லை,
என் துக்கங்கள் தாங்க இரு தோள்கள்.
மனதின் பசியோடு அலைந்தேன் தேடி உணவினை,
ஓர் நாள் வாழ்வினில் எத்தனை செலவுகள்!
சோர்வடைந்து சாய்ந்தேன் கோயில் வாயினில்,
ஏங்கியே வேண்டினேன் மகிழ்ச்சி காண சில வரவுகள்!
தோன்றியது ஓர் ஒளி கருணையால்,
கண்டதேன் விழி நற்பாதைக்கொரு வழி...
கைகோர்த்து நடந்தேன் சுமை பகிர்ந்த என் துணையின் பிடியில்.