Friday, December 21, 2007

கறுவிலிருந்து தாய்மடிவரை...

ஆழ்ந்து தூங்கியே ஏன் இருந்தேன் என்று யோசித்தேன்
மிருதுவான அரவணைப்போடு பல மாதம் வாழ்ந்தேன்
என் நினைவுகள் பிர்ரக்கும் முன்பு உருவாகியதென் இதயம்
என் அறியாமையில் உருவாகியதென் சுவாசம்

ஓர் கொடியின் மூலம் வந்தது என் உணவு
அதன் செயலாக்கத்தால் வந்தடைந்ததென் உணர்வு
இதயம் துடிதுடிப்பதேன் நினைவறிந்தது
அதனால் ஏற்படும் வளர்ச்சியை என் மனம் கண்டது

உணர்வுகளோடு உணர்ச்சிகளும் பெருகின
எனது பாதங்கள் உதைக்கத் தொடங்கின
கைகளோ, விரல்களோடு உருவாகி விளையாடின
ஆனால் ஒவ்வொரு அசைவிலும் ஏனோ ஓர் தடங்கல்?

யோசனைகள் என்னுள் குவிய ஆரம்பித்தன
ஏனிந்த தடையென்று கேள்விகள் கருவுற்றன
தெரிந்து கொள்ளவேண்டுமென்ற நோக்கம் ஒளிவிட்டது
அதன் விளைவுகளால் தொடங்கியது என்
கை-கால்களின் அசைவுகள்.

சிறிது-சிறிதாக வளர்ச்சி என்னுள் தெரிந்தது
எனது கண்ணிமைகள் திறபிற்காக ஏங்கியது
செவிக்குள் வெளியிலிருந்து கேட்கும் இசையின் அமுது
மனதினுள் செல்லும் பாதையை கண்டறிந்தது

இசை வெள்ளத்தில் ஆழ்ந்தேனென்று அறியாமல் தலையாடியது
அப்பொழு துணர்ந்தேன் வலியினா லின்புற்ற
தாயின் விரல்களை...
அதோடு சேர்ந்தாடியது என் அறையடிக்கூந்தல்
கண்களைத் திறக்க ஆசையூட்டியதென் மனம்

ஒரு நொடி கண் சிமிட்டிப்பார்தேன்
இருட்டாகத் தெரிந்ததென் தாயின் கருவறை
சில நிமிடங்களுக்குப்பிறகு வந்ததோர் ஆச்சர்யம்
உலகத்தை கண்டதென் விழிகள்,
தாயின் நுணிவிரலைத்தாங்கியதேன் கைகள்।

தாயோடு ஒன்றிருந்த என்னை
வெளி உலகத்தின் ஒரு நொடி பார்வை மகிழ்வூட்டியது
இந்த சிலிர்ப்பூட்டும் இன்பத்தைக்கொண்டாட நினைத்தேன்
உறங்கினேன் மறுபடியும் தாய்மடியில்...
கட்டை விரலை வாயில் வைத்து।

1 comment:

Thrivikraman said...

thamizh kavithai na varthaigal serthu ezuthalam, seri, adukaga ella vari'ilum varthai serthu ezuthanum illa. pala varthaigal piruchu azuthi sollum bodu adonoda poruLum azuthi solla padum. pira varthai oda thevayillama serthu ezuthina anda azutham poidum.